காதலியின் பிணத்தை 3 நாட்கள் எரித்தார்

காதலியின் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன் காதலியின் உடலை எரித்ததாக நேற்று நீதிமன்றத்தில் நடந்த லெஸ்லி கூ குவீ ஹொக்கின் வழக்கு விசாரணையில் தெரிய வந்தது. 
திருமணமான கூ, நொடித்துப் போன நிலையில் தன்னைவிட 17 ஆண்டுகள் வயது குறைந்த காதலி யான திருவாட்டி சுய் யஜியிடம் தான் திருமணம் ஆகாதவர் என்றும் தன் குடும்ப வியாபாரத்திற்கு தான் ஒரே வாரிசு என்றும் கூறி இருந்தார்.
அத்துடன் திருவாட்டி சுய்யை வற்புறுத்தி தங்கத்தில் முதலீடு செய்வதற்கென 20,000 வெள்ளியும் வாங்கியிருந்தார்.
ஆனால், தான் அடுக்கடுக்காகக் கூறி வந்த பொய்கள் வெட்டவெளிச் சம் ஆகிவிடும் என்ற பயத்தில் கூ, 2016ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியன்று கரையோரப் பூந்தோட்டத் தில் திருவாட்டு சுய்யின் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன் அவர் உடலை லிம் சூ காங் லேன் 8க்குக் கொண்டு சென்று எரித்தார்.
உடல் நன்கு எரிந்து சாம்பலாகி இருந்ததை உறுதிசெய்ய கூ மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து அவ்விடத் திற்குச் சென்று நிலக்கரியைப் போட் டும் மண்ணெண்ணெய்யை ஊற் றியும் வந்தார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று நேற்று வடகிழக்கு வட்டார மேயர் டெஸ்மண்ட் சூ கூறினார். படம்: 'கெல்லோக்ஸ்'

21 Jul 2019

ஆரோக்கிய உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஓராண்டு திட்டம்

தொண்டூழியர்கள், அதிபர் சவால் நன்கொடைத் திட்டம் மூலம் பயனடைந்து வருபவர்கள் ஆகியோருடன் திருவாட்டி ஹலிமா சந்தித்துப் பேசியதுடன் தெரு காற்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து, நடனம் போன்ற பல அங்கங்களில் பங்கேற்றார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

அதிபர் ஹலிமா யாக்கோப்: சமூகத்திற்கு ஆதரவு அளிக்க இளையர்கள் முன்வர வேண்டும்