சிங்கப்பூரிலிருந்து வெளியேற ‘மோபைக்’ விண்ணப்பம்

சிங்கப்பூர் சந்தையிலிருந்து ‘மோபைக்’ நிறுவனம் வெளியேறு கிறது. ‘ஓபைக்’, ‘ஓஃபோ’ ஆகிய இரு பெரும் பகிர்வு மிதிவண்டி நிறுவனங்கள் சிங்கப்பூரிலிருந்து வெளியேறியதையடுத்து மூன்றாவ தாக ‘மோபைக்’ வெளியேறுகிறது.
நன்கு நிர்வகிக்கப்பட்ட நிலை யில் சந்தையை விட்டு வெளி யேறுவதற்கான அதன் உத்தேச விண்ணப்பத்தை நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் திங்கட்கிழமை அன்று சமர்ப்பித்து விட்டதாக நிறுவனத் தின் பேச்சாளர் கூறினார்.
தென்கிழக்காசியாவில் ‘மோபைக்’கின் செயல்பாடுகளை நேர்த்தி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நிறு வனம் தெரிவித்துள்ளது.