சிங்கப்பூர்: தண்ணீர் விலையை மறுஆய்வு செய்யும் உரிமையை மலேசியா இழந்துவிட்டது

1962ஆம் ஆண்டின் தண்ணீர் உடன்பாட்டின்கீழ் தண்ணீர் விலைகளை மறுஆய்வு செய்யும் உரிமையை மலேசியா இழந்து விட்டது என்றும் இவ்விவகாரத் தில் சிங்கப்பூர் தெளிவாகவும் நிலைமாறாமலும் உள்ளது என் றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இருதரப்பு உடன்பாட்டு அம் சங்களுக்கு முறையான அனைத் துலக மூன்றாம் தரப்பு பூசல் தீர்வு நடைமுறைகளின் வழியாக தீர்வு காண சிங்கப்பூர் எப் போதும் தயாராக உள்ளது என் றும் அமைச்சின் பேச்சாளர் கூறி னார். மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல் லாவுக்குப் பதிலளிக்கும் வகை யில் கருத்து தெரிவித்த பேச்சா ளர், தண்ணீர் விலை மறுஆய்வு இதுவரை நடைபெற்றதில்லை என்றார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசிய திரு சைஃபுதீன், தண்ணீர் விலை களை மறுஆய்வு செய்வதில்லை என 1987ஆம் ஆண்டு முடி வெடுக்கப்பட்டதன் அடிப்படை யில் விலையை மறுஆய்வு செய் யும் உரிமையை மலேசியா இழந் துவிட்டதாக சிங்கப்பூர் தெரி விப்பதில் தங்களுக்கு உடன் பாடில்லை என்றார்.