மாணவர்களுக்கு  தண்ணீர் சிக்கன பயிற்சி 

கிளமெண்டி தொடக்கப்பள்ளியும் பொதுப் பயனீட்டுக் கழகமும் இணைந்து நேற்று நடத்திய பயிற்சியில் மாணவர்கள் தண் ணீரை சிக்கனமாகப் பயன்படுத்து வது குறித்து கற்றுக்கொண்டனர். இம்மாதம் 22ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் சிங்கப்பூர் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
பள்ளி வளாகத்தில் நடந்த இப்பயிற்சியின்போது தண்ணீர் விநியோகம் நின்றுவிட்டால் எப் படி இருக்கும் என்பதை மாணவர் கள் அனுபவபூர்வமாக அறிந்தனர்.  பள்ளியின் குளிர்நீர் சாதனங் களின் இயக்கம் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் தண்ணீர்ப் புட்டி களை கொண்டு வந்திருந்தனர்.
பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர் கார்த்திகேயன் சச்சின், 12, இப்பயிற்சி மூலம் தண்ணீர் சேமிக்கும் பல உத்திமுறைகளைக் கற்றுக் கொண்டதாக சொன்னார்.
குளிக்க ஐந்து நிமிடம்  போதும் என்பதை அறிந்த கார்த்திகேயன், இனி தன் சகோதரன் குளிக்க வெகு நேரம் எடுத்தால் சுடுநீர் சாதனத்தின் இயக்கத்தை நிறுத்தி விடப் போவதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுப் புற, நீர்வள மூத்த துணை அமைச் சர் டாக்டர் ஏமி கோர், தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்கும் முயற்சி களில் பள்ளிகள் ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதாக கூறியது டன் இளம் வயதிலேயே தண்ணீர் சேமிக்கும் பழக்கத்தை வளர்த் துக்கொள்ள இதுபோன்ற பயிற் சிகள் பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.2019-03-14 06:10:00 +0800