வளர்ச்சி முன்னுரைப்பு 2.5%ஆக குறைந்தது

தனியார் துறை பொருளியலாளர் கள் சிங்கப்பூரின்  இந்த ஆண்டு வளர்ச்சி முன்னுரைப்பை 2.5% ஆகக் குறைத்துள்ளனர். 
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த ஆண்டின் வளர்ச்சி 2.6% ஆக இருக்கும் என முன்னுரைக் கப்பட்டது. 
தற்போது அது சிறிதளவு  குறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் மொத்தம் 23 தனியார் துறை பொருளியலாளர்களும் ஆய்வாளர்களும்  பங்கேற்ற ஆய் வின் முடிவை சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்டதில் இது தெரிய வந்துள்ளது.
வர்த்தக, தொழில் அமைச்சு  1.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக் காட்டும் இடைப்பட்ட வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. 
அதில் பாதியைவிட சற்றுக் குறைவான வளர்ச்சியே இந்த ஆண்டு இருக்குமென தற்போது கணிக்கப்படுகிறது.
உற்பத்தி, நிதி, காப்புறுதி, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, உணவு சேவைகள், தங்குமிட சேவை ஆகியவற்றின் வளர்ச்சி குறித்த பொருளியலாளர் களின் எதிர்பார்ப்பு குறைந்து உள்ளது. 
கட்டுமானத் துறை மட்டுமே ஆக்ககரமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.