சுங்கை காடுட் கொலை தொடர்பில் ஆடவர் மீது குற்றச்சாட்டு

சுங்கை காடுட் கொலை தொடர்பில் ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

சுங்கை காடுட் லூப்பில் திங்கட்கிழமை அன்று இணைய வர்த்தக நிறுவனத்தின் இயக்குநரைக் கொலை செய்ததன் தொடர்பில் 22 வயது மலேசியர் யீ ஜிங் மன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வேலையில் ஈடுபாடு காட்டாத யீயை இரண்டாவது முறை வேலையிலிருந்து நீக்கப்போவதாகக் கூறிய திரு லின் சின்ஜியை, 29, யீ ஆத்திரத்தில் வெட்டுக்கத்தியால் தாக்கிக் கொன்றதாகக் கூறப்பட்டது. நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்குதலில் யீயும் காயமடைந்த நிலையில் சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் யீ மத்திய போலிஸ் பிரிவில் காவலில் வைக்கப்படுவார். யீயின் வழக்கு விசாரணை இம்மாதம் 20ஆம் தேதி அன்று நடக்கும். கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் யீ மரண தண்டனையை எதிர்நோக்குவார்.