கரையோரப் பூந்தோட்ட கொலை வழக்கு; ‘இறந்த பெண்ணுடன் தொடர்பில்லை’ 

காதலியைக் கொன்று அவரின் உடலை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லெஸ்லி கூ குவீ ஹொக், 50, கைதான பின் தனக்கும் காதலி என்று நம்பப்பட்ட அப்பெண்ணுக்கும் தொடர்பு இல்லை என்று மனநல மருத்துவரிடம் கூறியதாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இறந்த திருவாட்டி சுய், தன் மீது மையல் கொண்டதாகவும் தனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்றும் கூ மனநல மருத்துவரிடம் கூறியுள்ளார். கரையோரப் பூந்தோட்ட கொலை வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.