$600,000 கையாடிய கத்தோலிக்க ஆன்மிக மைய நிர்வாக இயக்குநர்

$600,000 கையாடிய கத்தோலிக்க ஆன்மிக மைய நிர்வாக இயக்குநர்

1 mins read

கத்தோலிக்க ஆன்மிக மையத்தின் கிட்டத்தட்ட $600,000க்கும் மேற்பட்ட பணத்தைக் கையாடிய குற்றத்திற்கு அதன் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஃபிரான்சிஸ் சேவியர் வான் குவொங் யிக்கு நேற்று நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மையத்தின் நிர்வாக இயக்குநராக 2004ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறுப்பேற்றிருந்த வான், அமைப்பில் முழுநேர தொண்டூழியராவார். அமைப்பின் காசோலைகளில் போலி கையெழுத்திட்டதுடன் அவற்றிற்குரிய பணத்தைத் தன் சொந்த வங்கிக் கணக்கில் சேரச் செய்தார். நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், போலிக் கையெழுத்திடல் ஆகியவற்றின் தொடர்பில் மொத்தம் 15 குற்றச்சாட்டுகளை வான் ஒப்புக்கொண்டார்.