ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் தடங்கலால் சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் பாதிப்பு

ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சேவைகளில் புதன்கிழமை (மார்ச் 13) ஏற்பட்ட தடங்கலால், உலகின் பல்வேறு பகுதிகளில் பலராலும் இந்தச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த இயலவில்லை. இந்தத் தடங்கலுக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஃபேஸ்புக் சேவையைப் பயன்படுத்த முடியவில்லை அல்லது குறுகிய அளவிலேயே பயன்படுத்த முடிவதாக டுவிட்டரில் சிலர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, சேவையில் தடங்கல் ஏற்பட்டிருப்பதாக கலிஃபோர்னியாவிலுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.

உலகெங்கிலும் இரண்டு பில்லியனுக்கும் மேலானோர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் பாதிக்கப்பட்டவர்களால் ஃபேஸ்புக் இணையத்தளத்திற்குச் செல்ல இயலவில்லை அல்லது கருத்துகளைப் பதிவேற்ற முடியவில்லை. சில பயன்பாட்டாளர்கள் ஃபேஸ்புக் செயலியை இயக்க முயன்றபோது, "தற்காலிகத் தடங்கல் ஏற்பட்டுள்ளது" என்ற தகவலைப் பெற்றனர்.

சிங்கப்பூரிலுள்ள பயன்பாட்டாளர்களும் இந்தப் பிரச்சனையை எதிர்நோக்கினார்கள்.

வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்தான் தடங்கல் ஆகப் பரவலாக இருந்ததாக டௌன்டிடெக்டர்.காம் இணையத்தளம் தெரிவித்தது. ஆயினும், மற்ற வட்டாரங்களிலுள்ள பயன்பாட்டாளர்களும் பாதிப்படைந்ததாகத் தெரிய வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!