வரி விவரங்களை முன்னதாகவே தாக்கல் செய்யுங்கள் 

வருமான வரிப் படிவங்களை ஏப்ரல் 18க்குள் பூர்த்தி செய்து அனுப்பிவிடும்படி சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், வரி செலுத்துவோருக்கு நினைவூட்டி இருக்கிறது. 2019 நிதி ஆண்டில் தனிப்பட்டவர்களுக்கு 50% வரை வரித் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அவர்கள் கூடினபட்சமாக $200 வரை சலுகை பெறலாம். வருமான வரி விவரங்களைப் பூர்த்திசெய்து தாக்கல் செய்யும் நடைமுறையை மேம்படுத்துவதற்கு இந்த ஆணையம் இந்த ஆண்டில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 
சிறார் நிவாரணம், டாக்சி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு எளிய நடைமுறை முதலான பலவும் அவற்றில் அடங்கும். முன்னதாகவே விவரங்களைத் தாக்கல் செய்து கடைசி நேர பரபரப்புகளையும் தண்டனை யையும்  தவிர்த்துக் கொள்ளும்படி ஆணையம் ஆலோசனை கூறுகிறது. மேல் விவரங்களுக்கு www.iras.gov.sg/irashome/TaxSeason2019/ என்ற இணையத் தளங்களுக்குச் செல்லுங்கள். myTax Portal மூலமாகவும் வரி விவரங்களைத் தாக்கல் செய்யலாம்.