கிராஞ்சி விரைவுச்சாலையில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் 45 வயது வேன் ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய வாகனத்திற்குக் கீழே மாட்டிக்கொண்டார். ஒரு காரும் வேனும் சம்பந்தப்பட்ட அந்த விபத்து சுவா சூ காங் புறவழிக்கு அருகே இரவு 10.05 மணிக்கு நிகழ்ந்ததாக போலிஸ் தெரிவித்தது. மீட்கப்பட்ட ஆடவர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவத்தைக் காட்டும் படங்கள் ஸ்டோம்ப் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டன.
வாகனத்தின் கீழே சிக்கினார்
1 mins read

