சுடச் சுடச் செய்திகள்

‘உடற்குறையாளர் ஆதரவு சேவைக்கான தேவை கூடுகிறது; அணுக்க சமூக உறவு அவசியம்’

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படைந்து வருகிறது. வயது ஆகஆக ஏற்படக்கூடிய கண்பார்வைக் கோளாறு போன்ற பாதிப்பு களை எதிர்நோக்கக்கூடிய முதியவர் களுக்கு ஆதரவுச் சேவைகளின் தேவை அதிகரிக்கும். இந்த அதிகரிப்பைச் சமா ளிக்க அணுக்கமான சமூக பங்காளித்துவ உறவு அவசியம் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார்.
சிங்கப்பூர் பார்வைக் கோளாறு உள் ளோர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உடற்குறையுடன் கூடிய மக்களுக்கு உதவும் வகையில் பரிவுமிக்க, எல்லாரையும் உள்ளடக்கக்கூடிய சமூகத்தைப் பேணி உருவாக்க வேண்டும் என்றும் இதற்குத் தொண்டூழியர்கள், நிறுவனங்கள், நன் கொடையாளர்களின் அணுக்க பங்காளித் துவ உறவு அவசியம் என்றும் வலியுறுத்தி னார். 
கடந்த 2015ல் நடத்தப்பட்ட தேசிய சமூக சேவை மன்றத்தின் ஆய்வு ஒன் றைச் சுட்டிக்காட்டிய அமைச்சர்,  உடற் குறையாளர்களை வேலையில் அமர்த்த தாங்கள் தயங்குவதாக மூன்று பங்குக் கும் அதிகமானோர் தெரிவித்து இருக் கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டார். 
சிங்கப்பூரில் உடற்குறையுடன் கூடிய 100 பேரில் ஐந்து பேர் மட்டுமே வேலை பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon