76,000 நிறுவனங்களுக்கு உதவிக்கரம்

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அரசாங்க அமைப்பு 2018ல் அமைக்கப் பட்டது. அது முதல் சுமார் 76,000 நிறுவனங்களுக்கு அது உதவி இருக்கிறது. என்டர்பிரைஸ் சிங்கப்பூர் வெளியிட்டுள்ள முதலாவது நிலவர அறிக்கையின் மூலம் இது தெரியவருகிறது. 
உள்ளூர் நிறுவனங்கள் ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு மேம்படவும்  வெளிநாடுகளில் விரிவடையவும் அந்த உதவி கிடைத்து இருக்கிறது. 
புதிதாக தொடங்கப்பட்ட நிறு வனங்களுக்கு நிதி அளித்தும் ஆலோசனைகளை வழங்கியும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் உதவி உள்ளது. இந்த அமைப்பு நேற்று தனது முதலாவது வருடாந்திர மறுபரிசீலனை அறிக்கையை வெளியிட்டது. 
உள்ளூர் சூழ்நிலை சவால்மிக்க தாக இருந்தாலும் இந்த அமைப்பு, உள்ளூர் நிறுவனங்களுக்கு நல்ல பலன்களை ஏற்படுத்தி இருக்கிறது என்று இதன் தலைவர் பீட்டர் ஓங் தெரிவித்தார். 
இன்டர்நேஷனல் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் என்ற அமைப்பும் ஸ்பிரிங் சிங்கப்பூர் என்ற அமைப் பும் முன்பு செயல்பட்டு வந்தன. 
இந்த இரண்டு அமைப்புகளையும் சேர்த்து என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 
நிறுவனத்தின் வளர்ச்சிக் கட்டங்களுக்கு ஏற்ப செயல்திட்டங்களையும் ஆதரவு சேவைகளையும் வழங்குவது இந்த அமைப்பின் பணியாகும்.