ஆகாயப் பாதுகாப்புக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அவசியம்

ஆகாயப் பாதுகாப்புக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அவசியம்

1 mins read
47895e65-db90-4905-9bbc-c7a78b84fabe
-
Google News Preferred Icon

சாங்கி விமானத் தளத்தில் பல அமைப்புகள் கலந்துகொண்ட விமான தற்காப்புப் பயிற்சி நேற்று நடந்தது. சிங்கப்பூரை நோக்கி பறந்து வந்துகொண்டிருந்த பய ணிகள் விமானம் ஒன்றை சந்தேக நபர்கள் கடத்திவிட்டதாக செய்தி வந்த உடனேயே இரண்டு எஃப்-16 போர் விமானங்கள் செயலில் குதித்தன. பறந்து வந்த பயணிகள் விமா னத்தில் இருந்த கடத்தல்காரர்களை பயணிகளே ஒடுக்கிவிட்டனர். அதேவேளையில், விமானத்தைச் சூழ்ந்த வீரர்கள், அதை இடை மறித்துத் தரையிறக்கினர். பிறகு போலிஸ் தொடர் நடவடிக்கைகளை எடுத்தது. இப்படி ஒரு பாவனைக் காட்சி பயிற்சியில் நடத்தப்பட்டது.