சட்டவிரோத வாணவேடிக்கைக்கு $5,000 அபராதம்

கடந்தாண்டு புக்கிட் பாத்தோக் வெஸ்ட் 6ல் வசிக்கும் குடியிருப்பாளர்களை துப்பாக்கி வெடிப்பு போன்ற சத்தம் வரவேற்றது. 
அங்கிருக்கும் அடுக்குமாடி வீடு புளோக் 194க்கு அருகே சட்டவிரோதமாக வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்த குற்றத்தை துப்பரவு பணியாளர் 54 வயது அழகப்பன் சிங்காரமும் அவரது மகன் 19 வயது ஹரிபிரசாந்த்தும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆபத்தான வாணவேடிக்கைச் சட்டத்தின்கீழ், திரு அழகப்பனுக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 28 தேதி அன்று, இவர்கள் தீபாவளி பண்டிக்கை பொருட்கள் வாங்க ஜோகூர் பாரு சென்றிருந்தனர். அங்கு வாண வேடிக்கை பொட்டலத்தை வாங்கி, நவம்பர் 6 தேதி அன்று இரவு 7.40 மணி அளவில் அதை புக்கிட் பாத்தோக் வெஸ்ட் 6ல் இருக்கும் அடுக்குமாடி வீடு புளோக்கில் பற்றவைத்ததில் வாண வேடிக்கை கிட்டத்தட்ட 10 மாடி உயரத்திற்கு மேல் வெடித்து இரண்டு நிமிடங்களுக்கு நீடித்தது.