சட்டவிரோத வாணவேடிக்கை: ஆடவருக்கு அபராதம்

1 mins read
05e228e9-074a-452a-b143-84fdff65b783
அழகப்பன் சிங்காரம் -

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் சட்டவிரோதமாக வாணவேடிக்கைகளை வெடித்ததாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 54 வயது அழகப்பன் சிங்காரத்துக்கு (படம்) $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவர் ஆபத்துமிக்க வாண வேடிக்கை சட்டத்தின்கீழ் குற்ற வாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட முதல் நபராவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதியன்று புக்கிட் பாத்தோக் வெஸ்ட் வட்டாரத்தில் தமது மகன் 19 வயது ஹரிபிரசாத்துடன் இணைந்து அழகப்பன் சிங்காரம் வாண வேடிக்கைகளை வெடிக்கச் செய்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதியன்று தீபாவளிக்காக அலங்காரப் பொருட்கள் வாங்க ஜோகூர் பாருவுக்குச் சென்றபோது அந்த '25 ஷாட் கேக்' வாணவேடிக்கை களை இருவரும் வாங்கினர். கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி இரவு 7.40 மணி அளவில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 6ல் உள்ள புளோக் 194Bயின் தரைத்தளத்திலிருந்து வாணவேடிக்கைகளை தந்தையும் மகனும் வெடிக்கச் செய்தனர். தொடர்ச்சியாக 25 ராக்கெட் வாணவேடிக்கைகள் ஒன்பதிலி ருந்து பத்தாவது மாடி உயரத் துக்குப் பாய்ந்து சென்று வெடித் ததாக தெரிவிக்கப்பட்டது. நடுவானில் அந்த வாணவேடிக் கைகள் வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தின. இது ஏறத்தாழ இரண்டு நிமிடங்களுக்கு நீடித்தது. வாணவேடிக்கை வெடிக்கும் சத்தம் கேட்டு அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள் பதற்றம் அடைந்தனர்.