ஜோகூர் நச்சுவாயு கசிவு:  நீர் நடவடிக்கைகள் நிறுத்தம்

ஜோகூர் பாருவில் ரசாயனக் கழிவுகள் சட்டவிரோதமாக கிம் கிம் ஆற்றில் கொட்டப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட நச்சுவாயு கசிவு சம்பவத்தால் சிங்கப்பூர் துணிகரச் செயல் பள்ளி (ஓபிஎஸ்) அனைத்து நீர் சம்பந்தப் பட்ட நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளது.
ஜோகூரின் பாசிர் கூடாங்கில் இந்த நச்சு வாயு கசிவு ஏற்பட்ட தால் சாகச நடவடிக்கைகளை நடத்தி வரும் ஓபிஎஸ், தேசிய இளையர் மன்றத்தின் உத்தரவு
படி இம்முடிவை எடுத்துள்ளது.
புலாவ் உபினில் ஓபிஎஸ் பள்ளியின் வளாகத்தில் பள்ளி களுக்காகவும் இளையர்களுக் காகவும் வெளிப்புற நடவடிக்கை கள், முகாம்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.
நச்சு வாயு கசிவு சம்பவத்தால் புலாவ் உபினைச் சுற்றியுள்ள கடல் நீர்ப்பகுதி எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டும் ஓபிஎஸ் தேசிய இளையர் மன்றத்தின் கீழ் இயங்கி வரும் ஓபிஎஸ் முன் னெச்சரிக்கையாக அதன் நீர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டுள்ளது.
கசிவு சம்பவத்தால் கிட்டத் தட்ட 390 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் சிங்கப் பூரின் தண்ணீர் விநியோகத்தில் எந்த விதப் பாதிப்பும் இல்லை என்று நேற்று முன்தினம் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, பொதுப் பயனீட்டுக் கழகம் ஆகிய அரசு நிறுவனங்கள் கூட் டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.