சுடச் சுடச் செய்திகள்

டாக்சி மோதியதில்  சைக்கிளோட்டிக்கு படுகாயம்

கணவருடன் எப்போதும் பிரேடல் சாலையில் சைக்கிள் ஓட்டி வந்த டாக்டர் லினெட் ஙொ, 46, சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று நடந்த விபத் தில் டாக்சியால் மோதப்பட்டு படுகாயம் அடைந்தார். அப்பர் தாம்சன் சாலையை நோக்கித் தம்பதியர் தங்கள் சாலை மிதிவண்டிகளை ஓட்டிச் சென்றபோது பெரும்சத்தம் கேட்டு முன்னால் சென்று கொண்டிருந்த டாக்டர் ஙொவின் கணவர், திரும்பித் தம் மனைவி பேச்சு மூச்சின்றி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
காலையில் நடந்த இவ்விபத் தில் டாக்சி மோதி டாக்டர் ஙொவின் பாதி தலைக்கவசம் உடைந்திருந்தது.

அவரின் மண்டைஓட்டிலும் காறை எலும்பிலும் முறிவு இருந்ததுடன் மூளையிலும் ரத் தக் கசிவு ஏற்பட்டது. வலது பக்கமுள்ள ஐந்து விலா எலும்புகள் முறிந்திருந்ததுடன் வலது நுரையீரல் செயலிழந்தது. அவரின் வலது கண் விபத்தில் பெரும்பாதிப்புற்றது. வலப்பக்க மாக அவரின் கண்விழி சிக் கிக்கொண்டதில் அதை நகர்த்த முடியாமல் அவருக்கு இரட்டைப் பார்வை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வலது காதில் ஏற்பட்ட காயத்தாலும் அவரால் சரியாகக் கேட்க முடியவில்லை.
ராஃபிள்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் டாக்டர் ஙொ, புதன்கிழமை இரவு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியும் தம் காரை எலும்பைச் சரிசெய்ய அடுத்த வாரம் அறுவை சிகிச்சைக்குச் செல்லவேண்டும். 
இவ்விபத்தின் தொடர்பில் டாக்சியை ஓட்டிச் சென்ற 57 வயது பெண், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon