விரைவுச்சாலை விபத்தில் ஒருவர் மரணம், ஒருவர் காயம்

நேற்று காலை கிராஞ்சி விரைவுச் சாலையில் இரு மோட்டார் சைக் கிள்கள், ஒரு கார், ஒரு கனரக வண்டி சம்பந்தப்பட்ட விபத்தில் 25 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்துள்ளார்.
மத்திய தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் கிராஞ்சி விரைவுச்சாலைப் பகுதியில் விபத்து நிகழ்ந்திருப்பதாக காலை 9.21 மணிக்குத் தகவல் கிடைத் ததாக போலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய 33 வயது மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் இங் டெங் ஃபோங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்.
இதன் தொடர்பில் காரை ஓட்டிய 24 வயது பெண் ணும் கனரக வாகனத்தை ஓட்டிய 57 வயது ஆடவரும் போலிஸ் விசா ரணையில் உதவி வருகின்றனர்.