90,000 முதலாளிகளுக்கு $600 மி. வழங்கீடுகள் 

பல்வேறு நிறுவனங்களின் 90,000க்கு மேற்பட்ட முதலாளிகள் சம்பள இணை நிதித் திட்டத்தின் கீழ் இந்த மாதம் $600 மில்லியன் மதிப்புள்ள வழங்கீட்டுத் தொகை யைப் பெறுவார்கள் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
அந்த முதலாளிகளில் பெரும் பாலோர் சிறிய, நடுத்தர நிறுவனங் களை நிர்வகிப்பவர்கள்.
இந்தச் சம்பள இணை நிதித் திட்ட வழங்கீடுகள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் கொடுக்கப்பட்டு விடும் என்று நிதி அமைச்சும் உள்நாட்டு வருவாய் ஆணையமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை யில் தெரிவித்தன.
அதிகரிக்கும் ஊழியர்களின் சம்பளச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் இந்தத் தொகை முதலா ளிகளுக்கு வழங்கப்படும்.
அதில் 70 விழுக்காட்டு தொகை சிறிய, நடுத்தர நிறுவனங் களுக்குச் செல்லும்.
இந்த அரசாங்க வழங்கீடுகள், முதலாளிகள் தங்கள் ஊழியர்க ளுக்கு கடந்த ஆண்டும் 2017ஆம் ஆண்டும் வழங்கிய சம்பள உயர்வு தொடர்பான செலவினத்தில் 20 விழுக்காட்டு தொகையை ஈடுகட் டும்.
இந்த இணை நிதி விகிதம் இந்த ஆண்டுக்கு 15 விழுக்காடும் அடுத்த ஆண்டுக்கு 10 விழுக்கா டாகவும் இருக்கும் என்று அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.