கிழக்கு-மேற்கு எம்ஆர்டி ரயில் சேவையில் தடை

கிழக்கு-மேற்கு எம்ஆர்டி ரயில் சேவையில் தடை

1 mins read
901d1000-c0f8-49f5-b031-791daa865a22
ரயில் சேவைத் தடையால் கிளமெண்டி எம்ஆர்டி நிலையத்தில் இலவசப் பேருந்துச் சேவை விடப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

தண்டவாளத்தில் நேற்று காலை ஏற்பட்ட கோளாற்றினால் கிழக்கு-மேற்கு பெருவிரைவு ரயில் பாதையில் சேவை தடைப் பட்டது. கிளமெண்டி எம்ஆர்டி நிலை யத்தின் அருகே உள்ள தண்ட வாளப் பகுதியில் காலை சுமார் 5.45 மணிக்குக் கோளாறு ஏற்பட் டதில் ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்கும் குவீன்ஸ்டவுன் எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையே ரயில் சேவை பாதிக்கப் பட்டது. இதனால் பாதிக்கப்பட் டோரின் பயண நேரம் 30 நிமிடங் கள் கூடலாம் என்று 'எஸ்எம் ஆர்டி' நிறுவனம் அதன் டுவிட் டர் பக்கத்தில் காலை ஏழு மணிக்கு முன்பே எச்சரித்திருந் தது. அதனையடுத்து ஏழு மணி அளவில் கோளாறு சரிசெய்யப் பட்டு விட்டதாகவும் சேவை வழக்கத்திற்குத் திரும்பிவிட்ட தாகவும் கூறப்பட்டது.