வெறுப்புணர்வு சித்தாந்தத்திற்கு  சிங்கப்பூரர்கள் இடம் தரலாகாது

உலகம் முழுவதும் இஸ்லாம் சமயத்திற்கு எதிரான வெறுப்பு உணர்வு அதிகரித்து வருவதைச் சமூகங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அத்தகைய சித்தாந்தத்தை நிரா கரிக்க வேண்டும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
வலதுசாரி வெறுப்புணர்வு சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் பல ஆண்டுகளாகப் பயங்கர வாதத் தாக்குதல்களை மேற் கொண்டு வரும் நிலையில் அவை இஸ்லாம் பெயரைச் சொல்லி நிகழ்த்தப்படும் தாக்கு தலைப் போல் அதிக கவனம் பெறவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தில் 49 பேரைப் பலி கொண்ட பயங்கரவாதத் தாக்கு தலை அடுத்து செய்தியாளர் களிடம் பேசிய திரு சண்முகம், “அந்தக் குற்றத்தை இழைத்த தாகச் சொல்லப்படும் சந்தேகப் பேர்வழியின் முகத்தைப் பார்க்கும் போது அது தீமையின் முகத்தைக் காண்பதுபோல் இருப்பதாகக் கருதுகிறேன்,” என்றார்.
தலைவர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதல்களை வன் மையாகக் கண்டிப்பதும் பாது காப்பை பலப்படுத்துவதும் ஒரு புறம் இருந்தாலும், இஸ்லாமுக்கு எதிரான வெறுப்புணர்வு அதி கரித்து வருகிறது என்ற உண் மையை சமூகங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சொன்னார்.