புகைத்தல் தொடர்பான குற்றம் புரிபவர்களுக்கு நாளை முதல் எச்சரிக்கைக் கடிதங்கள் கிடைக்கும்

ஆர்ச்சர்ட் ரோட்டில் புகைப்பிடிப் பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தை  விட்டு புகைப்பிடிப்போ ருக்கு எதிராக நாளை முதல் எச் சரிக்கைக் கடிதங்கள் வழங்கப் படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
அந்த எச்சரிக்கைக் கடிதங்க ளில் அமலாக்க நடவடிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைப் படுத்தப்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். மேலும் எச்சரிக்கைக் கடிதங்கள் பெறுவோரின் விவரங் களை வாரியத்தின் அதிகாரிகள் குறித்துக்கொள்வர்.
இதற்கு முன் புகைப்பிடித்தலுக் காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை விட்டு அவ்வாறு செய்வோருக்கு இதுவரை வாய்மொழி எச்சரிக்கை தான் கொடுக்கப்பட்டு வந்தது என்றும் வாரியம் கூறியது.
அடுத்த மாதத்திலிருந்து புகைத்தலுக்காக ஒதுக்கப்பட்
டுள்ள இடத்தை விட்டு புகைப்போ ருக்கு $200 அபராதம் அல்லது அதிகபட்சமாக $1,000 நீதிமன்ற அபராதம் விதிக்கப்படலாம்.
புகைத்தல் பகுதியை விட்டு புகைப்பிடித்ததற்காக வாய்மொழி எச்சரிக்கை பெற்றவர்களின் எண் ணிக்கை இந்தத் திட்டம் இந்த ஆண்டு அறிமுகமானதிலிருந்து 67 விழுக்காடு குறைந்துள்ளது.
திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 1,900 பேருக்கு வாய்மொழி எச் சரிக்கைகள் விடுக்கப்பட்டன. கடந்த வாரத்தில் அந்த எண் ணிக்கை 627க்குக் குறைந்தது.
“இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர்ச்சர்ட் ரோட்டில் புகைத்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை விட்டு வேறு இடங்களில் புகைப்போருக்கு எதிராக ஆலோ சனை கூறும் அணுகுமுறை கையா ளப்பட்டு வந்தது. இது தொடர்பான தகவல் பரிமாற்றமும் மக்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியும் பலன் அளித்துள்ளன,” என்று வாரியம் தனது ஃபேஸ்புக் பக்கத் தில் கூறியது.