போதைப் பழக்கத்துக்கு மீண்டும் திரும்புவோர் குறைவு

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போதைப் பழக் கத்துக்கு அடிமையாகும் மலாய்க் காரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆனால், அதேவேளையில் கைதாகும் மலாய் போதைப் புழங் கிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது என்றும் இது அனைத்து இனங்களிலும் தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செயற்கை போதைப் பொருட்களால் ஈர்க்கப்பட்டு, பின்னர் அவற்றுக்கு அடிமையா வோர் எண்ணிக்கையும் அதிக ரித்துள்ளது.
போதைப் பழக்கம் தொடர்பில் சமூகத்தினரிடையே கூடியிருக் கும் விழிப்புணர்வு காரணமாக மீண்டும் அக்கொடிய பழக்கத் துக்கு அடிமையாவோரின் எண் ணிக்கை குறைந்துள்ளது என்று உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று தெரிவித் தார்.
2013ஆம் ஆண்டில் மீண்டும் போதைப் பழக்கத்துக்கு அடிமை யாவோரின் விகிதம் 40 விழுக்கா டாக இருந்தது. இன்று அந்த விகிதம் 28 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது என்று திரு அம்ரின் சுட்டினார்.
2013ல், 1,710 மலாய் போதைப் புழங்கிகள் கைதாகினர். அந்த எண்ணிக்கை 2017ல் 1,618க்குச் சரிந்தது. ஆனால், அது 2018ல் 1,760க்கு உயர்ந்தது.
"கடந்த ஆண்டில், போதைப் புழங்கிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,438. அதில் 40 விழுக்காட்டினர் போதைப் பழக் கத்துக்குப் புதியவர்கள்.
"இது கவலையளிக்கும் அறி குறிகள். போதைப் புழங்கிகள் விகிதத்தில் மலாய் சமூகத்தினர் மிக அதிகமாக இடம்பெற்றுள்ள னர். இருப்பினும், இந்தப் பழக்கத் திலிருந்து விலகியிருப்போரின் விகிதத்திலும் நல்ல முன்னேற் றம் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!