சுடச் சுடச் செய்திகள்

இளையரிடம் தொண்டூழியத்தை ஊக்குவிக்கும் புதிய திட்டம் ஜூன் மாதத்தில் தொடங்கும்

உயர்கல்வி நிலையங்களில் உள்ள இளையரிடம் தொண்டூழியத்தை ஊக்குவிக்க எதிர்வரும் ஜூன் மாதம் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.
இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது கலா சார, சமூக, இளையர்துறை அமைச்சரான கிரேஸ் ஃபூவால் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் சிங்கப்பூர் இளையர் படையும் உயர்கல்வி நிலையங் களும் இணைந்து மாணவர் தலைவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுத்த உள்ளது.
இந்த அறிமுகத் திட்டத்தின் முதல்படியாக தொழில்நுட்பக் கல்வி கழகம், பலதுறைத் தொழிற் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர் தலைவர்கள் மூன்று நாள் பயிற்சி முகாமில் பங்கேற்பர். 
இந்த அறிமுகத் திட்டத்தை அதிபரும் இளையர் படையின் புரவலருமான ஹலிமா யாக்கோப், நேற்று இளையர் படை ஆண்டு தோறும் நடத்தும் சேவை வாரத்தை தொடங்கி வைத்து குறிப்பிட்டார்.
“இளையர்கள் பட்டதாரிகள் ஆனபின்பும் அவர்கள் தங்களைத் தொண்டூழியத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும்  விதமாக இளையர் படை அவர்களுக்கு தொடர்பு
களை ஏற்படுத்திக் கொடுக்கும்.
“இதன்மூலம், இந்த இளையர் கள் சக இளையர்களையும் தொண்டூழியப் பணியில் ஈடு படுத்தி பட்டதாரிகள் ஆனபின்பும் அவர்கள் சமுதாயத்திற்குத் தங் களால் ஆனதைச் செய்ய ஊக்கு விப்பர்,” என்று அதிபர் ஹலிமா யாக்கோப் கூறினார்.
கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு, தேசிய இளையர் மன்றம் ஆகியவற்றால் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இளையர் படை, சமூகத்துக்கு சேவை ஆற்றும் தேசிய அமைப்பாக உருவெடுத்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon