‘டவுன் சின்ட்ரோம்’ இளையர்களுக்கு புதிய திறன் பயிற்சி நிலையம்

டவுன் சின்ட்ரோம் குறைபாடு உள்ள இளையர்கள் சுதந்திரமாக வாழும் வழிமுறைகளைக் கற்றுக் கொள்ள முதலாவது சிறப்பு பயிற்சி நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளது.
'தி இன்டிபென்டண்ட் லிவிங் அண்ட டிரேனிங் செண்டர்' எனப் படும் அந்த பயிற்சி நிலையம் அடுத்த மாதம் 27ஆம் தேதி தெலுக் பிளாங்கா கிரசெண்டில் திறக்கப்படும் என்று சிங்கப்பூர் டவுன் சின்ட்ரோம் சங்கத்தின் தலைவர் திரு மோசஸ் லீ நேற்று தெரிவித்தார்.

முதல் பயிற்சி வகுப்பில் 24 பேர் பங்கேற்க முடியும். அதில் நிதித் திட்டமிடுதல், தன்னிச்சை யாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளு தல், சுய ஆலோசனை, இனவாத வாழ்க்கை, சமையல் போன்ற வாழ்க்கைத் திறன்கள் பற்றி போதிக்கப்படும்.
அறிவு வளர்ச்சி குன்றியவர்க ளுக்கு வாழ்க்கைத் திறன்களைப் போதிக்கும் இதர நிலையங்கள் இருந்தாலும், டவுன் சின்ட்ரோம் குறைபாடு உடைய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இந்த நிலையம் சிறப்பாகச் செயல்படும்.

டவுன் சின்ட்ரோம் சங்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருடன் நேற்றுக் காலை சமூக நடை மேற்கொண்டார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). படம்: ஜஸ்டின் ஃபெர்னான்டோ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!