கார்நிறுத்தத்தின் சுவரில் சிறுவர்களின் குறும்புச் செயல்

ரிவர்வேல் கிரசெண்ட் புளோக் 126Aல் உள்ள தனது மாமா வீட் டிலிருந்து கடந்த வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு சன் னலுக்கு வெளியே எட்டிப் பார்த் துக்கொண்டிருந்த 17 வயது மாணவி, அந்தப் புளோக்குக்கு எதிரே உள்ள அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தின் மேல் மாடியில் ஓர் இளம் பெண் ‘ஸ்ப்ரே’ சாயத் தைக் கொண்டு எழுதியதைப் பார்த்தார்.
உடனே தனது கைபேசியை எடுத்து அந்தக் காட்சியைப் பதிவு செய்தார். மேலும் அது குறித்து நடவடிக்கை எடுக்க தீர்மானித்தார் அந்த மாணவி.
நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய குமாரி டான், “அந்தக் காட்சியைப் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய முதலில் நினைத்தேன்.  அதனால் என்ன பயன்?
“அச்செயலைப் புரிந்தவர்கள் மற்ற இடங்களில் அந்தக் குறும்புச் செயலைப் புரிவார்கள். அவர்களைப் பயமுறுத்தினால், அவர்கள் அச்சத்தால் மீண்டும் அதை செய்ய மாட்டார்கள் என்று முடிவெடுத்தேன். ஆக, நான், ஓய், போலிசை அழைக் கவா? என்று கத்தினேன்,” என்றார்.
‘டிப்பிரஷன்’ எனும் சொல்லை சுவரில் எழுதிக் கொண்டிருந்த அந்த இளம் பெண் குமாரி டான் கத்துவதைப் பார்த்து, பயந்து போய், ‘ஸ்ப்ரே’ சாயத்தை அங்கேயே போட்டு விட்டு, அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்.