தீ விபத்தில் 7 கடைவீடுகள் அழிந்தன

எண் 643 கேலாங் ரோடு முகவரியில் நேற்று அதிகாலை நேரத்தில் மூண்ட தீயில் ஏழு கடைவீடுகள் அழிந்துவிட்டன. 60 தீயணைப்பாளர்கள் 3 மணி நேரம் போராடி அதிகாலை 5 மணிக்குத் தீயை அணைத்தனர். இந்தத் தீ விபத்து பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று அதிகாலை 1.47 மணி முதல் ஃபேஸ்புக்கில் பல விவரங்களைத் தெரிவித்து காணொளிகளையும் பதிவேற்றி வந்தது. இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. மொத்தம் 17 அவசரகால வாகனங்களும் தீயை அணைக்க உதவின. படம்: ஃபேஸ்புக்/சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை