துணிகரப் பயிற்சிக்குச் செல்வோரின் செயல் விவாதத்தைத் தூண்டியது

உபின் தீவில் உள்ள துணிகரச் செயல் பள்ளிக்குப் (Outward Bound Singapore) பயணம் மேற்கொண்ட மாணவர்கள் சிலர், பாசிர் ரிசில் தங் களின் சொந்தப் பைகளை ஒரு தள்ளி வண்டியில் வைத்து இழுத்துச் செல்லும் புகைப்படம் இணையவாசிகளிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது.
துணிகரப் பயிற்சிக்குச் செல்லும் மாணவர்களால் தங்கள் பைகளைச் சுமந்துச்செல்ல முடியாதா என்பதும் நமது இளையர்கள் எளிய வழியிலேயே தங்கள் பணிகளைச் செய்து முடிக்க நினைக்கிறார்களா என்பதும் அவர்க ளின் கேள்விகளாக இருந்தன.
கல்வி அமைச்சு-துணிகரச் செயல் பள்ளி சவால் திட்டத்தில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் உயர் நிலை மூன்று மாணவர்கள் அங்கு சென்றனர்.
மாணவர்கள் பயன்படுத்திய தள்ளு வண்டிகளைத் துணிகரச் செயல் பள்ளி கடந்த ஆண்டு, ஒன்று $940 என்ற விலையில் 74 வண்டிகளை $69,560க்கு வாங்கியது.
வெளிப்புறக் கற்றல் முகாம்களை நடத்தும் தனியார் அமைப்புகள் அத் தகைய தள்ளுவண்டிகளைப் பயன்படுத் துவதில்லை.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத் தின் சமூகவியல் பேராசிரியர் டான் எர்ன் செர், “வழக்கமான தூக்குப் பைகளுக்குப் பதிலாக இத்தகைய தள் ளுவண்டிகளைப் பயன்படுத்தும் செயல் எதையும் சமாளிக்கும் வலுவான சமூ கத்தை உருவாக்கும் சிங்கப்பூரின் நற் பெயருக்கு நன்மை விளைவிக்காது,” என்றார்.