அனைத்து சமயத்தினரும் ஓரணியில் திரள வலியுறுத்து

அனைத்து சமயத்தினரும் ஓரணியில் திரள வலியுறுத்து

1 mins read
477acff5-5aef-4561-aa7c-fbb7c13c3d97
-

மற்றவர்களிடம் தங்கள் அன்பை யும் பரிவையும் காட்ட சிங்கப்பூ ரர்கள் இனம், சமயம் ஆகிய வற்றுக்கு அப்பால் பார்க்க வேண் டும். அப்போதுதான் நியூசிலாந்து பள்ளிவாசல்களில் நிகழ்ந்த பயங் கரவாதச் செயல்கள் சிங்கப்பூரில் நிகழாமல் தடுக்க முடியும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மச கோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள் ளார். தெம்பனிஸ் வெஸ்ட் சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சருமான திரு மசகோஸ், "சிங்கப்பூரில் நீண்டகாலமாக நிலவிவரும் அமைதியையும் ஒற்று மையையும் நாம் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

அதை இன்றுவரை கட்டிக்காக்க நாம் நீண்டகாலம் எடுத்துள்ளோம்," என்றார். சமயக் குழுக்கள் கண்டனம் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல் களில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சிங்கப்பூரின் சமயக் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய பயங்கரவாதத் தாக் குதல் சம்பவங்களின்போது வெவ் வேறு சமயங்களைச் சேர்ந்த மக் கள் ஒற்றுமையுடன் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.

கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, தாக்குதலில் மடிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று மக்கள் மலர்க்கொத்துகளை வைத்தனர். படம்: ஏஎஃப்பி