சுடச் சுடச் செய்திகள்

பிரதமரின் புதல்வரை கார் ஓட்டுநர் ஒருவர் காணொளி எடுத்த விவகாரம்

பிரதமர் லீ சியன் லூங்கின் புதல் வர் திரு லி யிபெங்கை காட்டும் காணொளிகள் தொடர்பில் புகார் ஒன்று தாக்கலாகி இருப்பதாக போலிஸ் தெரிவித்தது. 
திரு லி யிபெங்கை 31 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் தனி யார் காரில் ஏற்றிச் சென்றதாகவும் போலிஸ் குறிப்பிட்டது. 
அந்த ஆடவர் திரு லியை அவருடைய அடையாளங்கள் பற்றியும் வீட்டு முகவரி பற்றியும் அவருக்குள்ள பாதுகாப்பு ஏற் பாடுகள் பற்றியும் திரும்பத் திரும்ப கேள்வி கேட்டு அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள முயன் றதை அந்தக் காணொளிகள் காட்டின. 
திரு லியின் அனுமதி இல்லா மல், அவருக்குத் தெரியாமல் அந்தக் காணொளிகள் எடுக்கப் பட்டு இருப்பதாக போலிஸ் அறிக்கையில் தெரிவித்தது. 
திரு லி பின்னணியை வைத்து பார்க்கையில்  அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் பெரும் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத் துவதால் இந்த விவகாரத்தை அந்த கார் ஓட்டுநரின் உதவி யுடன் போலிஸ் ஆராய்ந்து வரு கிறது. 
அந்த 31 வயது ஆடவர், ஏற் கெனவே பல போக்குவரத்து குற்றச்சாட்டுகளின் பேரில் குற்ற வாளி என்று தீர்மானிக்கப்பட்டவர் என்றும் போலிஸ் தெரிவித்தது. 
இதனிடையே, ஒரு ஃபேஸ்புக் பதிவில் பிரதமர் திரு லீ இந்தச் சம்பவம் பற்றி கருத்து தெரிவிப்பது போல் ஒரு போலியான படம் புழங்கியது பற்றியும் போலிஸ் புலன் விசாரணை நடத்துகிறது. 
இதன் தொடர்பில் 39 வயது ஆடவர் ஒருவர் போலிஸ் விசா ரணையில் உதவி வருகிறார். 
இவை பற்றி எல்லாம்  பிரதம ருக்குத் தெரியும் என்று அவரு டைய பத்திரிகைச் செயலாளர் சாங் லி லின் தெரிவித்தார். “எளிதில் பாதிக்கக்கூடியவர்கள் யாரும் இதுபோல நடத்தப்படலாம் என்ற கவலை இருக்கிறது. 
“எளிதில் பாதிக்கப்படக்கூடிய இதர பலரும் பல இடங்களுக்குத் தாங்களே செல்லக்கூடும். அவர் களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon