சுடச் சுடச் செய்திகள்

மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு அதிகமான பெண்கள் செல்கின்றனர்

பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் பரிசோதனை வசதிகளைக் கொண்டுள்ள ‘மேமோபஸ்’ பேருந்தில் அதிகமான பெண்கள் தங்கள் பரிசோதனையை முதல் முறையாக மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. 
முதல் முறையாகப் பரிசோதனை செய்துகொள்வோர் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 925 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் ‘மேமோபஸ்’ பரிசோதனை பேருந்து அறி முகப்படுத்தப்பட்ட பின்னர் அந்த எண்ணிக்கை 2,000க்கு உயர்ந்தது. 
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமமும் மார்பகப் புற்றுநோய் சங்கமும் இணைந்து உருவாக்கிய இப்பரிசோதனைக்கு முன்பைவிட இப்போது அதிகமான பெண்கள் செல்கின்றனர்.
அதற்குக் காரணம், பரிசோதனை வசதியாகவும் கட்டுப்படியாகவும் இருக்கின்றது என்று அவை கூறின. 
நேற்று பொங்கோல் 21 சமூக மன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘மேமோபஸ்’ பேருந்தில் 40 பெண்கள் பரிசோதனையை மேற்கொண்டனர். 
அவர்களில் 30 பேர் முதல் முறையாகப் பரிசோதனையில் பங்கேற்றவர்கள். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon