சுடச் சுடச் செய்திகள்

ஆரோக்கிய உணவைத் தேர்ந்தெடுக்க  வசதி குறைந்தோருக்கு உதவி

வசதி குறைந்தவர்களும் ஆரோக் கிய உணவைத் தேர்ந்தெடுக்க உதவும் புதிய திட்டம் அறிமுகமாகி உள்ளது.
தரமான, ஆரோக்கியமான உணவை வாங்கவும், உண்ணவும் அவர்கள் ஊக்கப்படுத்தப்படுவ துடன் அவர்கள் பயன்பெறும் வகையில் சமைத்துக் காட்டும் அங்கங்களும் ஊட்டச்சத்து விவரங்கள் பற்றி அவர்களுக்குப் போதிக்கும் நிகழ்ச்சிகளும் ஏற் பாடு செய்யப்படும் என்று சுகாதார, உள்துறை அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம் ரின் அமின் நேற்று தெரிவித்தார். 
சுகாதார மேம்பாட்டு வாரியம் தொடங்கியிருக்கும் இந்த அறி முகத் திட்டம் கெம்பாங்கான்-சாய் சீ அங்கம்பக்கத்தில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களுக்கு உத வும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை மற்ற வட்டாரங் களுக்கும் விரிவுபடுத்துவது பற்றி வாரியம் ஆராயும். 
இந்தப் புதிய திட்டம் சுகாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் உணவு முறைகளில் மாற்றங்க ளைக் கொண்டு வரும் என்று கூறிய திரு அம்ரின், சாய் சீயில் உள்ள ‘விவா’ வர்த்தகப் பூங்கா வில் உள்ள ஒருநாள் பேரங்காடியில் நேற்று பேசினார்.
“பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான காரியமன்று. உதாரணத்துக்கு, உணவில் சர்க்கரையின் அள வைக் குறைத்துக்கொள்வது போல,” என்றார். 
இந்தத் திட்டம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை நடைபெறும்.  நன்கொடையாளர்கள் உணவுப் பொருட்களை வசதி குறைந்தோ ருக்கு அளிக்கும்போது, ஆரோக் கியமான உணவு பற்றிய சுகாதாரக் குறிப்புகளையும் அவர்கள் தெரிந்துகொள்வர். 
இத்திட்டத்தின் வழி வசதி குறைந்தவர்கள் மாதத்துக்கு ஒரு முறை பேரங்காடியில் மளிகைப் பொருட்களை வாங்கும்போது 50% விலைக்கழிவு பெறுவர்.
நேற்று, தற்காலிகப் பேரங்காடியில் சுகாதார மேம்பாட்டு வாரியத் தால் பயிற்சியளிக்கப்பட்ட ஆறு தொண்டூழியர்கள் உணவுப் பொட் டலங்களில் ஆரோக்கிய குறிப்பு களை எவ்வாறு தெரிந்துகொள்வது என்பது பற்றி வசதி குறைந் தவர்களுக்கு சொல்லிக்கொடுத் தனர்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon