மூன்று மாதச் சரிவிற்குப் பின்னர் எண்ணெய் சாரா ஏற்றுமதி 4.9% உயர்ந்தது

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி சென்ற மாதம் 4.9% உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இந்த விகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது. மின்னியல் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி உயர்ந்திருப்பது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

ஏற்றுமதி 1.6% இறக்கம் காணும் என்றே பொருளியல் ஆய்வாளர்கள் முன்னுரைத்திருந்தனர்.

மின்னியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி வலுவிழந்தே உள்ளது. கடந்த அரை ஆண்டாகவே இந்த நிலையை இத்துறை சந்தித்து வருகிறது.

பிப்ரவரி மாதத்தின் மொத்த வர்த்தகம் $87.2 பில்லியனை எட்டியுள்ளது. அதற்கு முந்தைய மாதம் அந்த எண்ணிக்கை $85 பில்லியனாக இருந்தது.