அரசு, ஊடகம் பற்றியசிங்கப்பூரர்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளது

அரசாங்கம் மற்றும் ஊடகம் ஆகியவற்றின் மீது சிங்கப்பூரர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அளவு மற்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகிறது என்று ‘2019 எலட்மென் டிரஸ்ட் பெரோமீட்டர்’ எனும் ஆய்வு கூறுகிறது. 
இந்த ஆய்வில், அரசாங்கம், ஊடகம், அரசு சார்பற்ற அமைப்புகள், வர்த்தகம் ஆகிய முக்கிய பிரிவுகளில் மக்க ளின் நம்பிக்கை அளவு கணக்கிடப்பட்டது. அதில் 67 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
ஊடகத்தை எடுத்துக்கொண்டால், 56 விழுக்காட்டினர் அதன் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது பல வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் அதிகம். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் 48 விழுக்காட்டினரும் ஜப்பானில் 35 விழுக்காட்டினரும் ஊடகம் மீது நம்பிக்கை வைத்திருக் கிறார்கள்.