சமூக மன்றங்களில் ‘கேர்‌ஷீல்டு’ பற்றிய நிதி ஆலோசனை சேவைகள்

‘கேர்‌ஷீல்டு’ உதவித் திட்டம் பற்றி சிங்கப்பூரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைக்க சமூக மன்றங் களில் நிதி ஆலோசனையாளர்களை அமர்த்தும் திட்டம் இவ்வாண்டு பிற்பகுதியில் நடப்புக்கு வரவிருக்கிறது. 
நீண்டகால பராமரிப்புக்கான கட்டாய காப்புறுதித் திட்ட மான ‘கேர்‌ஷீல்டு’ அடுத்த ஆண்டு தொடங்கப்படும். இதன் தொடர்பில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க தொண்டூழியர்களுக்கு அழைப்பு விடுத்தார் சிங்கப்பூர் காப்புறுதி மற்றும் நிதிச்சேவை வழங்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு லியாங் சோ ஹோ. 
நேற்று முன்தினம் அச்சங்கத்தின் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஓட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், “சிங்கப்பூரர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் திட்டமிடுதலில் நிதி ஆலோசகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்,” என்றார்.