$155,000 மோசடி: முன்னாள் அரசாங்க ஊழியருக்கு சிறை

முன்னாள் மூத்த நிர்வாகி ஒரு வர் பொய்யான ஆவணங்களைக் காட்டி, தான் பணியாற்றிய ‘ஸ்பிரிங் சிங்கப்பூர்’ அமைப்பு $155,000 தொகையைச் செலுத்த வைத்தார். அதிலிருந்து $77,000ஐத் தனது சொந்த செலவுக்கு எடுத்துக்கொண்டார்.
இதன் காரணத்தால் 46 வயது லியோங் வெங் சியாவ் மீது இவ்வாண்டு ஜனவரியில் 18 மோசடிக் குற்றங்களும் 12 ஏமாற் றுக் குற்றங்களும் சுமத்தப்பட்டன.
2015 முதல் 2016ஆம் ஆண்டு வரை புரிந்த இக்குற்றங் களுக்காக லியோங்குக்கு நேற்று நான்கு ஆண்டு சிறைத் தண் டனை விதிக்கப்பட்டது. 
ஸ்பிரிங் சிங்கப்பூரும் இன்டர் நேஷனல் எண்டர்பிரைஸ் சிங்கப் பூர் அமைப்புகள் ஒன்றிணைக்கப் பட்டு இப்போது என்டர்பிரைஸ் சிங்கப்பூர் என்று புதிய பெயர் பெற்றுள்ளது.
தீர்ப்பை வாசிப்பதற்கு முன் பேசிய மாவட்ட நீதிபதி மேத்யூ ஜோசஃப், தீவிரமாக திட்டமிடப் பட்ட இந்த மோசடிச் சம்பவத்தின் மூளையாக லியோங் செயல்பட்டி ருக்கிறார் என்று சொன்னார்.
ஸ்பிரிங் சிங்கப்பூர் அமைப்பில் லியோங் இருந்தபோது, புத்தாக்க மற்றும் ஆற்றல் பற்றுச்சீட்டுக ளுக்கு விண்ணப்பிக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கைகளை மதிப்பிடும் பொறுப்பில் இருந்தார்.
 

Loading...
Load next