விமானத் தடத்தில் ‘சேட்ஸ்’ ஊழியர்கள் கைகலப்பு

சாங்கி விமான நிலையத்தின் தரைச் சேவை நிறுவனமான ‘சேட்ஸ்’ தனது பெண் ஊழியர்கள் இருவருக்கிடையே விமானத் தடத் தில் நடந்த கைகலப்பு பற்றி விசா ரித்து வருவதாகத் கூறியுள்ளது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குக் கிடைத்த 26 வினாடிகள் நீடித்த காணொளியில் ‘சேட்ஸின்’ ஊழி யர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதையும் அவர் களை மேலும் ஐந்து ஊழியர்கள் தடுக்க முயன்றதையும் காண முடிந்தது.
“இச்சம்பவம் குறித்து நாங்கள் தீவிர புலனாய்வு நடத்தி வருகி றோம். இப்படிப்பட்ட நடத்தையை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம்,” என்று ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்சிடம் ‘சேட்ஸ்’ கூறியது. 
இதனால், விமானச் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

‘சேட்ஸ்’ நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக் கிக் கொண்ட னர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்