என்டியுசி ஃபேர்பிரைசில் 100 பொருட்களின் விலைகள் ஓராண்டுக்கு நிலையாக இருக்கும்

வாழ்க்கைச் செலவுகளை மிதப் படுத்த உதவவும், விலையின் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப் படுத்தவும் என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி தனது சொந்த வர்த் தகச் சின்னத்தைக் கொண்டிருக் கும் 100 பொருட்களின் விலையை அடுத்த 15 மாதங்களுக்கு மாற்றா மல் நிலையாக வைத்திருக்க கடப் பாடு தெரிவித்துள்ளது.
அந்த 100 பொருட்களில் பாதிக்கு மேற்பட்டவற்றின் விலை கள் நேற்று முதல் 30% வரை குறைக்கப்பட்டுள்ளன.
அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் மற்ற இடங்களில் விற்கப்படும் பிரபலமான வர்த்தகச் சின்னங்க ளைக் கொண்டிருக்கும் பொருட் களின் விலையைக் காட்டிலும் தனது பேரங்காடியில் அவை குறைந்தது 20% குறைவாக இருக்கும் என்றும் ஃபேர்பிரைஸ் கூறியது.
அரிசி, சமையல் எண்ணெய், பறவை சார்ந்த பொருட்கள், சோப்பு, ஷேம்பு, பற்பசை போன்ற கழிவறைப் பொருட்கள், வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்கள் போன்றவை அந்த 100 பொருட்க ளில் அடங்கும்.
இந்த விலை நிலைப்பாட்டை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கச் செய்யும் திட்டம், அடுத்த ஓராண் டில் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் உத்தேச விலையேற் றத்தை சிங்கப்பூரர்கள் சமாளிக்க உதவுவதற்கு செய்யப்பட்டது என் றும் ஃபேர்பிரைஸ் கூறியது.

1950களில் பிறந்த மெர்டேக்கா தலைமுறையினர் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் தங்கள் மெர்டேக்கா தலை முறை அட்டையைக் காண்பித்து தாங்கள் வாங்கும் பொருட்களின் விலையில் 3% கழிவு பெறலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்