கொடுமைப்படுத்தி, மிரட்டிய தம்பதியருக்கு சிறை

பிரம்பால் அடித்தல், உதைத்தல், அரிசியும் சீனியும் கலந்த உணவை பலவந்தமாகச் சாப்பிடச் சொல்லு தல், தமது சொந்த வாந்தியை உண்ணச்சொல்லுதல் என தொடர்ந்து தங்கள் இல்லப் பணிப் பெண்ணை பல வழிகளில் கொடு மைப்படுத்திய தம்பதியருக்கு நேற்று சிறையும் அபராதமும் தண் டனைகளாக விதிக்கப்பட்டன.
ஒரு சந்தர்ப்பத்தில், மோ மோ தான் என்ற அந்த 32 வயது மியன்மார் நாட்டுப் பணிப்பெண், தனது உள்ளாடைகளுடன் வீட்டு வேலைகளைச் செய்ய வற்புறுத்தப் பட்டார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மியன்மாரில் அவரது குடும்பத் தினரைக் கொல்ல தாங்கள் கூலிப் படையை ஏவவும் தயங்க மாட்டோம் என்று அந்தத் தம்பதியர் மிரட்டியுள் ளனர்.
தம்பதியரில் ஒருவரான 42 வயது முன்னாள் விற்பனை நிர் வாகி சியா யுன் லிங்க்கு நேற்று மூன்று ஆண்டுகள் 11 மாதச் சிறைத் தண்டனையும் $4,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அவர் அந்தப் பணிப்பெண் ணுக்கு $6,500ஐ இழப்பீடாகத் தர வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது.
வட்டார தகவல் தொழில்நுட்ப நிர்வாகியாகப் பணியாற்றிய திரு வாட்டி சியாவின் கணவரான டே வீ கியட்டுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை மாவட்ட நீதிபதி ஒலிவியா லோ விதித்தார். மேலும் திரு டே, பணிப்பெண்
ணுக்கு $3,000ஐ இழப்பீட்டுத் தொகையாகக் கொடுக்க வேண் டும் என்று உத்தரவிடப்பட்டது.
31 நாள் நீதிமன்ற விசாரணைக் குப் பிறகு இம்மாதம் 4ஆம் தேதி அந்தத் தம்பதியர் குற்றவாளிகள் என்று நீதிபதி உறுதிப்படுத்தினார்.
சியா, பணிப்பெண்ணை எட்டு முறை தாக்கியும் ஒரு முறை தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியும் உள்ளார். 
வெளிநாட்டு மனிதவள வேலை வாய்ப்புச் சட்டத்தின்படி, மூன்று பிள்ளைகளுக்குத் தாயான திரு வாட்டி சியா மீது ஆறு குற்றச்சாட் டுகள் சுமத்தப்பட்டிருப்பதை நீதி பதி சுட்டினார். 
அவற்றில் பணிப்பெண்ணை உள்ளாடைகளோடு வீட்டு வேலை களைச் செய்ய தூண்டியதும் போதிய உணவு அளிக்காததும் அடங்கும்.
மேலும் தங்களின் மற்றொரு பணிப்பெண்ணான 34 வயது ஃபிட்ரியாவை மியன்மார் பெண் ணைத் தாக்க அத்தம்பதியர் கட்டளையிட்டதாகவும் குற்றச் சாட்டு முன்னதாகப் பதிவாகி இருந்தது.
அந்த இந்தோனீசியப் பணிப் பெண்ணையும் தம்பதியர் கொடு மைப்படுத்தியுள்ளனர். இதற்காக, திரு டேக்கு இரண்டு ஆண்டு, நான்கு மாதங்கள் சிறையும் சியா வுக்கு இரண்டு மாதச் சிறையும் விதிக்கப்பட்டது.