மின்-ஸ்கூட்டர் ஓட்டுநருக்கு அபராதம்

மின்-ஸ்கூட்டரைக் கவனக்குறைவான விதத்தில் ஓட்டி ஒரு பெண்ணுக்குக் காயம் விளைவித்ததற்காக ஆடவர் ஒருவருக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  
23 வயது பர்கநூதீன் முகம்மது முகைதீனுக்கு செவ்வாய்க்கிழமை ( 19 மார்ச்) இந்த அபராதம் விதிக்கப்பட்டது. 

உட்லண்ட்ஸ் அவென்யூ 5லுள்ள தனது ஃபாரஸ்ட்வில் கூட்டுரிமை வீட்டைவிட்டு  திருவாட்டி பெட்டி சுவா சியூ கியாங், 37, வெளியேறிக்கொண்டிருந்தபோது பர்கநூதீனின் மின்-ஸ்கூட்டர் அவரை மோதியது. இதனால் திருவாட்டி சுவா, தனது இடது காலில் காயமடைந்தார். பர்கநூதீனுக்கு எதிராக திருவாட்டி  சுவா பின்னர் போலிசாரிடம் புகார் செய்தார்.

கூட்டுரிமை வீட்டு நுழைவாயிலில் பர்கநூதீன் தனது மின்-ஸ்கூட்டரை நிறுத்த அல்லது மெதுவாகச் செல்ல தவறியதாக அரசாங்க வழக்கறிஞர் டான் சியாவ் டியன் தெரிவித்தார்.