மூன்று வாகனங்களை மோதிய டாக்சி ஓட்டுநர் கைது

மூன்று வாகனங்களை மோதிய டாக்சி ஓட்டுநர் கைது

1 mins read
1411bc65-e5fb-4415-aa1c-c48f63fbe9be
-

பிடோக் வாகன நிறுத்துமிடத்தில் மதுபோதையில் காரை ஓட்டி மூன்று வாகனங்களை மோதியதாகச் சந்தேகிக்கப்படும் 62 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு காரையும் இரண்டு லாரிகளையும் அவரது 'சில்வர்கேப் டாக்சி' மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்த தகவல் பின்னிரவு 1.15 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். புளோக் 631 பிடோக் ரிசர்வாயர் ரோட்டிலுள்ள கார் நிறுத்தத்திற்கு முன்பு இச்சம்பவம் நடந்ததாக போலிசார் கூறினர். சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. போலிசார் பின்னர் டாக்சி ஓட்டுநரைக் கைது செய்தனர். சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.