3 வாகனங்களை மோதிய ஓட்டுநர் கைது

பிடோக் வாகன நிறுத்துமிடத்தில் மூன்று வாகனங்களை மோதிய மதுபோதையில் வாகனோமோட்டியதாக சந்தேகிக்கப் படும் 62 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 
ஒரு காரையும் இரண்டு லாரிகளையும் அவரது ‘சில்வர்கேப் டாக்சி’ மோதியதாகக் கூறப்படுகிறது. பிடோக் ரெசர்வார் சாலை, புளோக் 631க்கு எதிரேயுள்ள கார் நிறுத்தத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து பின்னிரவு 1.15 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை. டாக்சி ஓட்டுநரைக் கைது செய்த போலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.