மின் ஸ்கூட்டரைக் கவனக்குறைவாக ஓட்டி 37 வயது திருவாட்டி பெட்டி சுவா சியூ கியாங்கிற்கு காயம் விளைவித்த குற்றத்திற்காக 23 வயது பர்கநூதீன் முகம்மது முகைதீனுக்கு நேற்று 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் அவென்யூ 5லுள்ள தமது ஃபாரஸ்ட்வில் தனியார் குடியிருப்பிலிருந்து திருவாட்டி பெட்டி சுவா வெளியே வந்துகொண்டிருந்தபோது பர்கநூதீனின் மின்ஸ்கூட்டர் அவரை மோதியது. இதனால் திருவாட்டி சுவாவின் இடது காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் எலும்பு முறிவு ஏதும் இல்லை என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி காலை 9.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து திருவாட்டி சுவா போலிசில் புகார் செய்தார். சிங்கப்பூரின் குடிமைத் தற்காப்புப் படையில் தேசிய சேவையை ஆற்றி வரும் பர்கநூதீன் தனது மின் ஸ்கூட்டரை நிறுத்த அல்லது மெதுவாகச் செலுத்தத் தவறியதாக அரசாங்க வழக்கறிஞர் டான் சியாவ் டியன் தெரிவித்தார்.
மாதுக்கு காலில் காயம் ஏற்படுத்திய மின்ஸ்கூட்டர் ஓட்டிக்கு $2,000 அபராதம்
1 mins read

