‘வெறுப்புணர்வு பிரசாரத்தைத் தடுக்க கடும் சட்டங்கள் தேவை’

வெறுப்புணர்வுப் பிரசாரத்தைத் தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித் துள்ளார்.
அந்தப் பிரச்சினையை எதிர் கொள்வதில் இணையத் தொழில் நுட்ப நிறுவனங்களும் இணையத் தளங்களும் போதுமான அளவு நடவடிக்கை எடுப்பதில்லை என்று திரு சண்முகம் கூறினார்.
வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சு, இன, சமய உறவுகள் குறித்து விவாதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாம் ஒரு தீர்மானத்தை முன்மொழிய இருப் பதாக அமைச்சர் சண்முகம் சொன்னார்.
“இன உறவுகளைக் கட்டமைப் பதிலும் அதில் நமது அணுகுமுறை குறித்தும் விவாதம் நடத்தப்படும். இதன்மூலம் பலரது கண்ணோட் டங்களை அறிய முடியும். அரசாங் கத்தின் நிலையையும் வெளிப் படுத்த முடியும்,” என்றார் அவர்.
இது, எங்கு கட்டுப்பாட்டு எல்லைகள் வரையறை செய்யப்பட வேண்டும், எவை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதை ஒரு சமுதாயமாக ஒன்றிணைந்து செய்ய நம்மை அனுமதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஷங்ரிலா ராஸா செந்தோசா வில் நேற்று நடைபெற்ற சமய மறுவாழ்வுக் குழுவின் 15வது வருடாந்திர சந்திப்பில் கலந்து கொண்டு, முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
தமது உரையின்போது நியூசி லாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையும் அவர் குறிப்பிட் டார். தாக்குதலுக்கு முன்பாக துப்பாக்கிக்காரன் 73 பக்க அறிக்கை ஒன்றை இணையத்தில் பதிவேற்றியதையும் அவர் சுட்டி னார்.