இருநூற்றாண்டு நிறைவு நினைவுப் பொருட்கள்

இருநூற்றாண்டு நிறைவு நினைவுப் பொருட்கள்

1 mins read
95bac1c1-0f7e-44e1-a3bd-c6f440134976
-

நாட்டின் இருநூற்றாண்டு நிறைவை ஒட்டிச் சிறப்பு பதக் கங்கள், நோட்டுகள் ஆகிய வற்றை சிங்கப்பூர் நாணயச்சாலை வெளியிடவுள்ளது. சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸ் சிங்கப்பூர் வர்த்தக மையமாக நிறுவும் ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டு 200 ஆண்டுகள் ஆகி விட்டதை நினைவுகூரும் நோக் கில் அவர் உருவத்தைத் தாங்கிய நான்கு வகை பதக்கங்கள் அறி முகப்படுத்தப்பட உள்ளன. அத்துடன் சுதந்திரத்திற்கு முந்திய சிங்கப்பூரின் நாணய வரலாற்றைக் குறிப்பிடும் சிறப்பு வங்கி நோட்டுப் பிரதிகளும் வெளியிடப்படவுள்ளன. இவை மரினா பே சேன்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்தில் நாளை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடை பெறும் நாணயச் சந்தையில் விற் கப்படும். மேல்விவரங்களுக்கு நாணயச்சாலையின் இணையப் பக்கத்தையும் அணுகலாம். மரினா பே சேன்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மைய ஹால் 'ஏ'யில் மார்ச் 22-24 வரை விற்கப்படவுள்ள நினைவுப் பொருட்கள். படம்: சிங்கப்பூர் நாணயச்சாலை