முதலாளி வீட்டில் $34,000 மதிப்புள்ள பொருட்களைத் திருடிய பணிப்பெண்

சாங்கி விமான நிலையக் குழுமத் தின் தலைவர் லியு முன் லியோங் கின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த இந்தோனீசியர் பார்ட்டி லியானி (படம்), 45, முதலாளியிடமிருந்து $34,000க் கும் மேற்பட்ட மதிப்புடைய பொருட் களைத் திருடியதாக நேற்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. 
20 நாட்கள் நடந்த வழக்கு விசாரணைக்குப் பின் பார்ட்டி மீது திருட்டு தொடர்பான நான்கு குற் றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. 
பார்ட்டி கையாடிய பொருட்களில் $10,000 மதிப்புள்ள ஆடம்பர வகை கடிகாரங்கள், தலா $150 மதிப்புள்ள 115 துணிகள், உபரி பாகங்களுடன் $2,000க்கு மேல் மதிப்புள்ள இரு ‘ஐ-போன்’கள் போன்றவை அடங்கியிருந்தன.
திரு லியுவின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பார்ட்டி திருடியதாகக் கூறப்பட்டது.