வசதி குறைந்தோருக்கு உதவ நடமாடும் சந்தை

வசதி குறைந்த குடும்பங்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் அறநிறுவனம், முதல் முறையாக நேற்று நடமாடும் சந்தையை ஏற்பாடு செய்தது.
கடலுணவு, கோழி இறைச்சி, பழங்கள், காய்கறிகள் போன்ற $50 மதிப்புள்ள உணவுப் பொருட் களை 500 வசதி குறைந்த குடும் பங்கள் வாங்க அறநிறுவனம் டெக் கீ சமூக மன்றத்தின் வெளியே நேற்று இச்சந்தையை நடத்தியது.
கடலுணவு, கோழி இறைச்சி போன்றவை சற்று விலை அதிகம். வசதி குறைந்தோர் இவற்றை அடிக்கடி வாங்குவதில்லை. அதனால் இச்சந்தையில் இவை கிடைக்கும் என்று அறிந்ததும் அது பெரிதும் வரவேற்கப்பட்டது என்றார் ஒரு தொண்டூழியர்.