சிங்கப்பூரிலிருந்து பத்திரங் களைத் திருடியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை மிக்கி ஃபெரேரா புரோச்செஸ் (படம்) மறுத்துள்ளார். சிங்கப்பூரின் எச்ஐவி தரவுத் தளத்திலிருந்து தகவல் கசிந்த சம்பவத்துடன் தொடர்புடைய புரோச்செஸ் அமெரிக்காவின் கென்டாக்கி மாநில நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் இவ்வாறு கூறினார். இதைத் தொடர்ந்து நீதிமன் றம் அவரது வழக்கை மே 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த விசாரணை கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்காவின் அரசாங்க வழக் கறிஞர் டிமிட்ரி ஸ்லாவின் தெரி வித்தார். எச்ஐவி தரவுத்தளத்திலிருந்து நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததற்கு புரோச்செஸ் காரணம் என்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு ஜனவரி மாதம் தெரிவித்தது.
எச்ஐவி தகவல் கசிவு தொடர்பில் புரோச்செஸ் குற்றச்சாட்டு மறுப்பு
1 mins read
சிங்கப்பூரின் எச்ஐவி தரவுத் தளத்திலிருந்து தகவல் கசிந்த சம்பவத்துடன் தொடர்புடைய புரோச்செஸ் -

