ரயிலிலிருந்து வெளிவந்த வெண்புகைக்குக் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட கசிவு காரணம்

போன விஸ்தா எம்ஆர்டி நிலையத்தில் இருந்த ரயில் ஒன்றிலிருந்து புதன்கிழமை (மார்ச் 20) காலை வெண்புகை வெளிவந்ததற்கு குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட கசிவு காரணம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.அந்த ரயில் அப்போது கிழக்கு-மேற்கு பாதையின் பாசிர் ரிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக எஸ்எம்ஆர்டி கூறியது.

காலை சுமார் 7.45 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயிலிலிருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

“கூடுதல் சோதனைகளுக்காக அந்த ரயில் உடனே சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது,” என்றும் எஸ்எம்ஆர்டி கூறியது.